அறுவதாம் பச்சை

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Ruta graveolans L.

குடும்பம் : Rutaceae

வளரிடம் : மலைப்பாங்கான இடங்களில் வளரும் மணமுடைய வண்ண பசுமையான குறுஞ்செடி.

வளரியல்பு : மணமுடைய சதாப்பு இலை என்றும் வழங்கப்பெறும் செடி.

மருத்துவப் பயன்கள்: இதன் இலை மருத்துவப் பயனுடையது. வலி போக்குதல், வெப்பம் உண்டாக்குதல், கோழையகற்றுதல், மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களுடையது.

இலைச் சாறில் 10 துளியைத் தாய்ப்பாலுடன் கலந்து சிறுகுழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.

உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் தணியும்.